Categories
சினிமா தமிழ் சினிமா

BEAST: இந்தியை எதிர்க்கும் விஜய்…. இணையத்தில் செம டிரெண்ட்…!!!!

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”பீஸ்ட்”. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, அபர்ணா தாஸ், செல்வராகவன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்தநிலையில் இந்த படம் இன்று வெளியானது. படத்தை காண இரவு முதலே ரசிகர்கள் திரையரங்குகள் முன்பு ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என காத்திருந்து படத்தை பார்த்து ரசித்து வருகின்றனர். இந்த படத்தில் விஜய் பேசி தெறிக்கவிடும் வசனம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று தாறுமாறாக வைரலாகி வருகிறது. “உனக்கு வேணும்னா தமிழ் கத்துக்கிட்டு வா..எல்லா தடவையும் இந்தியில ட்ரான்ஸ்லேட் பண்ண முடியாது..” என்று பேசுவதெல்லாம் வேற லெவலாம். இணைப்பு மொழி என்று ஏ ஆர் ரகுமான், சிம்பு, அனிருத் என திரைப்பிரபலங்கள்  கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில் இந்த வசனம் சமூக வலைதளங்களை விவாதம் ஆகி வருகிறது.

Categories

Tech |