விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படம் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் பீஸ்ட் படத்தில் முஸ்லிம் சமுதாயத்தை சிறுமைப்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டி, அப்படத்தை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் பீஸ்ட் படத்தால் அமைதியாக இருக்கும் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைய வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளார். பல திரையரங்குகளில் பீஸ்ட் படத்திற்கு பதில் கே ஜி எஃப் 2 திரையிடப்படும் நிலையில் புதிய சிக்கல் எழுந்துள்ளது.