நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக உள்ளது. அதேசமயம் யஷ் நடித்துள்ள கேஜிஎஃப் 2 திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதியும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் பீஸ்ட் திரைப்படத்திற்கு 800 முதல் 850 திரையரங்குகள் ஒதுக்கப்பட உள்ளதாகவும், கே ஜி எஃப் 2 திரைப்படத்திற்கு 200 முதல் 250 திரையரங்குகள் ஒதுக்கப்பட உள்ளதாகவும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதனால் பீஸ்ட் படத்தின் வசூல் பாதிக்கப்படும் என தெரிகிறது. இந்த இரு திரைப்படங்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. ரசிகர்கள் அனைவரும் திரைப்படங்களை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.