நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் நடிக்கிறார் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் தொடங்கியது. விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் இந்த படம் இருக்கும் என்று இயக்குனர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பீஸ்ட் திரைப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த படத்தில் வில்லனாக இவர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செல்வராகவன் நடிக்கும் இரண்டாவது படம் இது. இதற்கு முன்னதாக ‘சாணிக் காயிதம்’ என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த படம் இன்னும் வெளியாகவில்லை.