Categories
சினிமா தமிழ் சினிமா

திருமணம் பற்றி மனம் திறந்த ”பீஸ்ட்” பட நடிகை…. என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க….!!

பூஜா ஹெக்டே சமீபத்தில் திருமணம் குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழில் ‘முகமூடி’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதனையடுத்து, இவர் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். மேலும், தெலுங்கு மற்றும் இந்தி படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.

இந்த வருடம் நிச்சயமாகத் தமிழ்ப் படம்: பூஜா ஹெக்டே உறுதி | pooja hedge tweet  - hindutamil.in

இந்நிலையில், இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில், ”திருமண வயது வந்துவிட்டது என்பதற்காக திருமணம் செய்து கொள்வது கண்டிப்பாக சரியல்ல. மேலும், வாழ்க்கை முழுவதும் ஒரு மனிதரோடு சேர்ந்திருக்க முடியும் என தோன்றினால் தான் திருமணம் செய்யவேண்டும்” என கூறியிருக்கிறார்.

Categories

Tech |