இலங்கையின் கொழும்பு நகரத்தில் இருக்கும் 50க்கும் அதிகமான திரையரங்குகளில் பீஸ்ட் திரைப்படம் வெளியாகியிருக்கிறது.
இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதால் மக்கள் ஒவ்வொரு நாளும் அதிக இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள். உணவுப்பொருட்கள் மற்றும் மருந்துப்பொருட்களுக்கு கூட கடும் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்திருக்கிறது. இந்த நிலையிலும் நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தை பார்க்க ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் திரையரங்குகளில் குவிந்து கொண்டிருக்கிறார்கள்.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம் சுமார் 50 க்கும் அதிகமான திரையரங்குகளில் இன்று திரையிடப்பட்டிருக்கிறது. எனவே ரசிகர்கள் அதிக ஆர்வமுடன் பீஸ்ட் திரைப்படத்தை காண குவிந்திருக்கிறார்கள். அங்கு, இத்திரைப்படத்திற்கு 850 லிருந்து 3000 ரூபாய் வரை டிக்கெட் வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.