விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படம் குறித்த பல தகவல்கள் வெளியாகியுள்ளது.
கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் விஜய்யின் 65-வது படமான பீஸ்ட் படத்தில் குக் வித் கோமாளி புகழ், யோகி பாபு, பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். மேலும் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
இந்தப் படத்தினுடைய ஃபர்ஸ்ட் லுக் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இந்நிலையில் சென்னையில் தொடங்கவிருக்கும் 3-ஆம் கட்ட படப்பிடிப்பில் பீஸ்ட் செட்டில் கேமரா பின்னால் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பூஜா ஹெக்டே பகிர்ந்துள்ளார்.
ஆனால் சிறிது நேரத்திலேயே அவர் அந்த பதிவினை நீக்கிவிட்டார். இருப்பினும் அந்த புகைப்படங்களை ஸ்கிரீன்ஷாட் எடுத்து சிலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். மேலும் சர்க்கார், பிகில், மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் ஷூட்டிங் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கவனமாக இருந்தும் வெளியாகிவிட்டது. அதை போலவே பீஸ்ட் படமும் ஆகிவிடக் கூடாது என படக்குழுவினர் எச்சரிக்கையாக இருந்து வருகின்றனர்.
பீஸ்ட் படம் ஒருபக்கம் பாதுகாக்கப்பட்டு வரும் நிலையில் பூஜா ஹெக்டே பகிர்ந்த புகைப்படங்களை யாராவது சுட்டிக் காட்டியதால் அவருடைய பதவு நீக்கப்பட்டதா என்பது குறித்து தகவல் எதுவும் தெரியவில்லை. ஆனால் பிரபலங்கள் பலரும் ஆர்வக்கோளாறில் ரகசியத்தை பாதுகாக்காமல் உளறி வருகின்றனர்.
இதையடுத்து பீஸ்ட் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிந்ததும் பீஸ்ட் படக்குழு செப்டம்பர் மாதம் ரஷ்யா புறப்பட உள்ளதாகவும், முக்கியமான சண்டைக்காட்சிகள் அங்கு எடுக்கப்படும் எனவும், மாஸ்டர் படம் 2021-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிடப்பட்டது அதை போல் பீஸ்ட் படத்தை 2022-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிட உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.