Categories
சினிமா தமிழ் சினிமா

அமெரிக்காவில் ”பீஸ்ட்” திரைப்படம் இத்தனை தியேட்டரில் ரிலீசா…..? வெளியான அப்டேட்…..!!!

அமெரிக்காவில் ‘பீஸ்ட்’ திரைப்படம் ரிலீசாகும் தியேட்டர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”பீஸ்ட்”. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, அபர்ணா தாஸ், செல்வராகவன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

Beast is banned by the Ministry of Information in Kuwait. || நடிகர் விஜய்யின் “பீஸ்ட்” படத்தை வெளியிட தடை..!

இதனையடுத்து ஏப்ரல் 13-ஆம் தேதி ரிலீசாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், இந்த திரைப்படம் அமெரிக்காவில் 500க்கும் மேற்பட்ட திரையரங்கில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தமிழகத்தில் 350 திரையரங்குகளிலும், தெலுங்கில் 156 திரையரங்குகளிலும் படத்தை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.

Categories

Tech |