Categories
சினிமா தமிழ் சினிமா

விஜயின் பீஸ்ட் படம்…. யார் ரிலீஸ் பண்ணபோறா தெரியுமா….? அப்போ அதெல்லாம் வதந்தியா….?

நடிகர் விஜயின் பீஸ்ட் படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட உள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”பீஸ்ட்”. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லி, அபர்ணா தாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தை ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கிடையில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் படத்தின் இரண்டு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இதுமட்டுமின்றி இப்படத்தின் போஸ்டர்கள், ப்ரோகளும் மக்களிடம் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பீஸ்ட் படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் படத்தின் டீசரை எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் படம் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பீஸ்ட் படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதற்கிடையில் சமீபகாலமாக ரெட் ஜெயன்ட் நிறுவனம் பல படங்களை கைப்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விஜயின் படத்தையும் கைப்பற்றியுள்ளது. இதனைத் தொடர்ந்து உதயநிதி முதல் தயாரித்த படமான குருவி படத்தின் போது விஜய்கும் உதயநிதிக்கும் மனஸ்தாபம் எற்படிருந்ததாக தகவல் வெளிவந்தன.

அதன்பின் விஜயின் படங்களை உதயநிதி தயாரிக்கவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது உதயநிதி பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விஜயின் படத்தை வாங்கி வெளியிடுவதால் இருவருக்கும் இந்த பிரச்சனை சரியாகி விட்டதாக பேசப்படுகிறது. மேலும் ரசிகர்கள் சிலர் இருவருக்கும் எந்த மனஸ்தாபமும் இல்லை இருவரும் நல்ல உறவிலேயே இருந்து வருகின்றனர் என்று கூறிவருகின்றனர்.

Categories

Tech |