Categories
சினிமா தமிழ் சினிமா

என்ன கொடுமை சார்…. விஜய்க்கு வந்த சோதனை…. இணையதளத்தில் லீக்கான பீஸ்ட் திரைப்படம்….!!!!

தமிழ் ராக்கர்ஸ் பீஸ்ட் திரைப்படம் வெளியான சில மணி நேரங்களிலேயே  இணையதளங்களில் கசிய விட்டுள்ளது.

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”பீஸ்ட்”. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்த நிலையில் இந்த படம் நேற்று வெளியானது. பீஸ்ட் படத்தை பார்த்த ரசிகர்கள் சிலர் சுறா, வில்லு, பைரவா, புலி போன்ற படங்களை போல் இருப்பதாக தெரிவித்துள்னர். மேலும் சிலர் இணையதள பக்கங்களில் பீஸ்ட் படத்தை கிண்டல் செய்து மீம்ஸ் போட்டு வருகிறார்கள். மற்றொரு பக்கம் நெல்சன் திலீப்குமாரை கலாய்த்து, விளாசிக் வருகிறார்கள் விஜய் ரசிகர்கள்.

இந்நிலையில் பீஸ்ட் திரைப்படம் வேஸ்ட் என்று விமர்சனங்கள் வெளிவரும் வேளையில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளங்களில் படத்தை கசிய விட்டுள்ளது. எந்த ஒரு புதிய திரைப்படங்கள் வந்தாலும் வெளிவந்த சில மணி நேரத்திலேயே இணையதளங்களில் வெளியிடுகிறது. வார இறுதியில் திரையரங்கிற்கு சென்று பீஸ்ட் படத்தை பார்க்கலாம் என்று நினைத்தவர்கள் கூட தற்போது தமிழ் ராக்கர்ஸில் பார்த்து விடுகிறார்கள். இதற்கிடையில் நல்ல இல்லாத படத்திற்கு டிக்கெட்டுக்கு காசு, வாங்க நிறுத்திவிட்டு கட்டணம் போன்று அதிக விலைக்கு கொடுத்து படம் பார்ப்பதற்கு பதிலாக தமிழ் ராக்கர்ஸிளையே பார்த்து விடலாம் என்று சினிமா ரசிகர்கள் நினைத்து வருகின்றனர். இவர்களின் இந்த செயலுக்கு அதிக அளவில் பணத்தை போட்டு படத்தை எடுத்த தயாரிப்பாளர்கள் தான் ரத்த கண்ணீர் வடித்த வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |