நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் வரும் 13ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஹீரோயினியாக பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடித்து உள்ளார். அதுமட்டுமல்லாமல் செல்வராகவன், ஷான் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, அபர்ணா தாஸ் என்று மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து இருக்கின்றனர்.
இப்படம் 5 மொழிகளில் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. தமிழில் உருவாகியுள்ள இந்த படத்தை தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடவுள்ளனர். அண்மையில் வெளியாகிய பீஸ்ட் படத்தின் டிரைலர் அனைவரையும் கவர்ந்து ஹிட் ஆகியுள்ளது. இந்த நிலையில் வெளியீட்டிற்கு தயாராக உள்ள இந்த படத்தை குவைத் அரசு தடை செய்துள்ளது. இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் போல் சித்தரித்து இருப்பதாக கூறி தடை விதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இதே காரணத்துக்காக மற்றொரு அரபு நாடான கத்தாரிலும் பீஸ்ட் திரைப்படத்தை ரிலீஸ் செய்வதற்கு தடை விதித்துள்ளது. இதற்கிடையில் சமீபத்தில் இதே காரணத்துக்காக நடிகர் துல்கர் சல்மான் நடித்த குரூப் மற்றும் நடிகர் விஷ்ணு விஷால் நடித்த எஃப் ஐ ஆர் திரைப்படங்களை தடை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.