Categories
உலக செய்திகள்

அழகிய 2 பாண்டா கரடிகள் ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டது!!

சீனாவில் இருந்து  2 பாண்டா கரடிகள், ரஷ்யாவுக்கு தனி விமானத்தில் ஆராய்ச்சிக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

சீனாவிலிருந்து  அழகிய 2 பாண்டா கரடிகள் ஆராய்ச்சிக்காக ரஷ்யாவில் உள்ள மாஸ்கோவிற்கு அனுப்பிவைக்கப்பட்டு 15 ஆண்டுகள் வரை அங்கு தங்கவைக்கப்படவுள்ளன. அதன்படி ரூ இ (Ruyi) என்ற அந்த ஆண் பாண்டாவும், டிங் டிங் (Dingding) என்ற அந்த பெண் பாண்டாவும் பெட்டியில் அடைக்கப்பட்டு வண்டியில் கொண்டு சென்றனர். பின்னர் தனி விமானத்தில் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டன.

Related image

இந்த அழகிய பண்டாவிற்கு  காய்கறிகள் உள்ளிட்ட உணவுகளும் அப்போது வழங்கப்பட்டன. நாடு கடந்து செல்லக்கூடிய  2  பாண்டாக்களுக்கும், அங்கிருந்த அனைவரும்  அளவு கடந்த பாசத்துடன் வழியனுப்பி வைத்தனர்.

Categories

Tech |