பிரபல சீரியல் நடிகை தனது குழந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை முதன்முறையாக சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் கடந்த 2007ஆம் ஆண்டு ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த செல்லமடி நீ எனும் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதேவி. இதைத் தொடர்ந்து வாணி ராணி, தங்கம், செம்பருத்தி, ராஜா ராணி, கல்யாண பரிசு உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்த ஸ்ரீதேவி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புகைப்படக்கலைஞர் அசோக் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் இந்த அழகிய தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. நடிகை ஸ்ரீதேவி அவர் குழந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை முதல் முறையாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
https://www.instagram.com/p/CRvNbLzFboB/