Categories
அரசியல்

“ஆட்சியில் இல்லாதவர்களின் அழகான தேர்தல் அறிக்கை பயனற்றது” முதல்வர் விமர்சனம்…!!

ஆட்சியில் இல்லாதவர்கள் வெளியிட்டுள்ள அழகாக தேர்தல் அறிக்கையால் ஒரு பயனுமில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

நெல்லை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மனோஜ் பாண்டியனை ஆதரித்து வள்ளியூர் பகுதியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். அவர் பேசும் போது , தாங்கள்தான் ஆட்சியில் இருப்பதாகவும், அதனால், தங்களின் தேர்தல் அறிக்கைகளில் இடம்பெற்றுள்ள திட்டங்கள்தான் நடைமுறைக்கு வரும் என்று அவர் தெரிவித்தார்.

முதல்வர்  பிரச்சாரம் க்கான பட முடிவு

மேலும் முதல்வர் பேசுகையில் , திமுக ‌தலைவர் முக.ஸ்டாலின், வெறும் விமர்சனங்களை மட்டும் முன்வைப்பதாகவும், தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்தபோது என்ன செய்தார்கள் என்று ஒருபோதும் சொல்வதில்லை என்று  குற்றம்சாட்டிய முதல்வர் திமுக_வினர் பல பகுதிகளில் பணம் கொடுத்து ஓட்டு வாங்க முயற்சிப்பதாகவும்  குற்றம் சாட்டினார்.

Categories

Tech |