ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 4 டன் எடையுடைய யானை சிலை பூஜைகள் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள நாயக்கன்பட்டி பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த பல வருடங்களாக கற்சிலை வடிவமைக்கும் சிற்ப கூட்டத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூரில் இருக்கும் ஒரு கோவிலுக்கு யானை சிலை செய்வதற்காக கார்த்திக்கிற்கு ஆர்டர் வந்துள்ளது.
இதனையடுத்து கார்த்திக் ஒரே கல்லில் 4 டன் எடையிலான யானை சிலையை அழகாக வடிவமைத்துள்ளார். இந்த சிலையானது 7 1/2 அடி நீளம், 3 அடி அகலம் மற்றும் 5 உயரத்தில் அழகாக செதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வேலைப்பாடுகள் முடிந்த பிறகு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட யானை சிலையை வாகனம் மூலம் மதுரைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.