Categories
சினிமா தமிழ் சினிமா

அழகு மட்டும் போதாது…. திறமை இருக்கணும்… ராஷ்மிகாவை உதாரணம் காட்டிய தளபதி…!!  

நேற்று நடந்த வாரிசு இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா அழகா இருந்தா நடிக்க வந்திரலாம் அப்படின்னு இருப்பதில்லை. திறமை இருந்தால் தான் நிலைச்சு நிற்க முடியும் என்பதற்கு அவர் ஒரு உதாரணம். இப்ப நான் உங்களுக்கு திருஷ்டி சுத்தி போட்றேன். மற்றபடி என்னுடைய நண்பர்கள் ஸ்ரீமந்த், டிடிவி கணேஷ், கணேஷ் வெங்கட் ராம், சங்கீதா, சமீதா, சஞ்சனா, குட்டீஸ், எடிடர் பிரவீன் சார், சுனில் சார், டான்ஸ் மாஸ்டர், சண்டே பயிற்சியாளரும் சரி இவங்க எல்லாரும் சேர்ந்து தான் இந்த படத்தை உருவாக்கி இருக்கின்றோம். இந்த படம் உங்கள் எல்லாருக்கும் பிடிக்கும் என நாங்கள் நம்புகின்றோம்.

இந்த திரைப்படம் உறவுகளைப் பற்றி பேசும் என்பதால் இது உறவுகளைப் பற்றிய அழகான அன்பான ஒரே ஒரு குட்டி கதை மட்டும் சொல்லிக்கிறேன். ஒரு குடும்பத்தில் அப்பா, அம்மா, அண்ணன், தங்கச்சி. அப்பா தினமும் வேலைக்கு போய்விட்டு வரும்போது இரண்டு சாக்லேட்டுகளை வாங்கிட்டு வருவாரு. அதை இரண்டு குழந்தைகளுக்கும் கொடுப்பார்.

தங்கச்சி பாப்பா அந்த சாக்லேட்டை உடனே சாப்பிட்டு விடும். அண்ணன் அடுத்த நாள் அந்த சாக்லேட்டை பள்ளிக்கு எடுத்துட்டு போக வேண்டும் என அதை மறைத்து வைப்பார். ஆனா தங்கச்சி பாப்பா அங்கே இருந்து அண்ணன் சென்றதும் அந்த சாக்லேட்டையும் எடுத்து சாப்பிட்டு விடும். இது வழக்கமா நடந்துக்கிட்டே இருந்தது. ஒரு நாள் அந்த தங்கச்சி பாப்பா அண்ணன் கிட்ட அன்பு என்றால் என்ன என கேட்டது. அதற்கு அந்த அண்ணன் சொல்கின்றார்.

நீ உன்னுடைய சாக்லேட்டையும் சாப்பிட்டு விடுகிறாய் நான் மறைத்து வைத்திருந்த சாக்லேட்டையும் சாப்பிட்டு வருகின்றாய். ஆனா நீ சாப்பிட்டு விடுவாய் என தெரிந்தும் தினமும் அங்கேயே உங்க அண்ணே சாக்லேட் கொண்டு போய் வைக்கிறான்ல அதுதான் அன்பு எனக் கூறுகின்றார். ஆகையால் அந்த அன்பு தான் உலகத்தையே ஜெய்கின்ற ஒரு மிகப்பெரிய ஆயுதம் என சொல்கின்றாங்க. நமக்காக எதையும் விட்டுக் கொடுக்கின்ற உறவுகள், எதுக்காகவும் நம்மளை விட்டுக் கொடுக்காத நம்ம நண்பர்கள் இன்று இந்த இரண்டு அன்பு இருந்தாலே போதும் என தெரிவித்தார்.

Categories

Tech |