மிகவும் பிரபலமான, ‘மிஸ் இன்டர்நேஷனல் குயின்’ அழகி பட்டத்தை பிலிப்பைன்ஸின் ஃபுஷியா அன்னே ரவேனா வென்றுள்ளார்.
மிஸ் இன்டர்நேஷனல் குயின் என்னும் அழகி போட்டியானது திருநங்கைகளுக்காக நடத்தப்படுகிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்றால் நடைபெறாமல் இருந்த இந்த அழகிப்போட்டி இந்த வருடம் தாய்லாந்தில் இருக்கும் பட்டாயா நகரத்தில் நடந்திருக்கிறது. இறுதி போட்டி, இன்று நடைபெற்றுள்ள நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டவரான ஃபுஷியா அன்னே ரவேனா பட்டம் வென்றிருக்கிறார்.
சுமார் 22 பேர் பங்கேற்ற இந்த போட்டியின் இறுதிச் சுற்றில் கொலம்பியா, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இருவர் இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தைப் பிடித்திருக்கிறார்கள். மிஸ் இன்டர்நேஷனல் குயின் பட்டம் பெற்ற பின் ஃபுஷியா அன்னே ரவேனா தெரிவித்ததாவது, மக்களிடையே அமைதி, ஒற்றுமை மற்றும் அன்பை பரபரப்புவேன்.
அனைத்து மக்களும் ஒரே வானத்திற்கு அடியில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒரே காற்றைத்தான் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம். பல்வேறு வேற்றுமைகளுக்கு இடையே வாழ்ந்தாலும், அனைத்து மக்களும் பெறும் அன்பு என்பது உலக அளவில் ஒன்றாகத்தான் உள்ளது என்று கூறியிருக்கிறார்