Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

எண்ணெய் பசை பிரச்சனையா….? வாரத்தில் 6 நாள்…. இந்த 6 STEP பாலோ பண்ணுங்க….!!

முகத்தில் எண்ணெய் பசையை தவிர்ப்பதற்கான சில வழிமுறைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

சருமம் எண்ணை பசைக்கான காரணங்கள் : 

மரபியல் பாரம்பரியம்,

அழகுசாதன பொருட்களை அதிகம் பயன்படுத்துதல்,

ஹார்மோன் மாற்றங்கள்,

 உணவு பழக்கம்,

 மன அழுத்தம்,

 நீர்சத்து குறைதல் 

மேற்கண்ட காரணங்களின் அடிப்படையில் உங்களுக்கு முகத்தில் எண்ணெய் வடிகிறதா ? சருமத்தில் எண்ணெய்ப் பசையாக இருக்கிறதா ? இதற்காக நீங்கள் கவலைப்பட்டு, மருத்துவரை பார்க்க வேண்டியதில்லை. உங்கள் சமயலறையிலேயே இதற்கான தீர்வுகள் உள்ளது. இதோ அவற்றில் சில, 

முகத்தை கழுவவும் : கேட்பதற்கு மிக சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால் நீண்ட நேரம் முகம் கழுவவில்லை என்றால், முகத்தில் எண்ணெய் பசை சேரும். தினசரி குறைந்தது இரண்டு முறை கிளிசரின் சோப்பு போன்ற மென்மையான சோப்பு பயன்படுத்தி முகத்தை கழுவுங்கள். கடினமான டிடெர்ஜென்ட் கொண்ட சோப்புகளை கண்டிப்பாக தவிருங்கள்.

தேன் தடவுங்கள் : சரும பிரச்சனைகளுக்கு மிகச் சிறந்த இயற்கை நிவாரணிகளில் ஒன்று தேன். இதில், உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் கிருமி நாசினி பண்புகள், எண்ணெய் பசை மற்றும் பருக்கள் உள்ள சருமத்துக்கு தீர்வளிக்கும். இதற்கு தேனை முகத்தில் மென்மையாக மெல்லிய படலமாக பூசவும். பின் பத்து நிமிடங்கள் அப்படியே உலர வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். 

பளிச்சிட வைக்கும் கற்றாழை : கற்றாழையில் கிருமிநாசினி மற்றும் எண்ணையை உரியும் தன்மைகள் உள்ளன. இது சருமத்தின் பளபளப்பைக் கூட்டும். முகம் மற்றும் கழுத்தில் பூசி 20 நிமிடங்கள் உலரவிட்டு பின் முகத்தை நீரால் கழுவவும். 

தக்காளி : தக்காளியில் நிறைந்திருக்கும் வைட்டமின் சி சத்து சருமத்தின் பளபளப்பை அதிகரிப்பதுடன், எண்ணெய் சுரப்பை குறைக்கும். தக்காளியை பாதியாக வெட்டி வட்ட இயக்கத்தில் முகத்தில் தேய்க்கவும். அப்படியே 15 நிமிடங்கள் உலர விட்டு, பின் குளிர்ந்த நீரால் முகத்தை அலசவும். 

கலையாக்கும் க்ரீன் டீ : க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை எண்ணெய் சுரப்பைக் கட்டுப்படுத்தி அலர்ஜியை குறைக்கின்றன. ஒரு கப் நீரில் க்ரீன் டிஇலைகளை போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை வடிகட்டி, ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி கொள்ளவும். உங்கள் முகத்தில் அப்போது அதை  ஸ்ப்ரே செய்து கொள்ளவும். 

பளபளப்பாக்கும் பாதாம் : முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கவும், அதிகப்படியான எண்ணெய் பசையை உரியவும் பாதாம்பருப்பு நல்ல தீர்வளிக்கும். 3 தேக்கரண்டி பாதாம் பொடியுடன், 2 தேக்கரண்டி தேன் கலந்து பேஸ்ட் போல் செய்து கொள்ளவும். இதை முகத்தில் பூசி நன்றாக மசாஜ் செய்யவும். 15 நிமிடங்களுக்கு பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். 

Categories

Tech |