கொரோனா தொற்றில் இருந்து மீண்டு எழுந்த கணவன், மனைவி மடியிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் மிட்டூரை சேர்ந்த 60 வயதான சந்திரசேகர் என்பவர் தனது மனைவியுடன் பெங்களூரில் சிறிய வியாபாரம் ஒன்றை செய்து வருகிறார். இவருக்கும் இவரது மனைவிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு 15 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். பின்னர் இருவரும் தொற்றில் இருந்து மீண்டு தங்களது வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு பெங்களூரு செல்ல குப்பம் ரயில் நிலையத்திற்கு வந்து இருந்தனர்.
ரயில் நிலையத்தில் காத்திருந்தபோது சந்திரசேகருக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது. இதன் பிறகு அவர் மனைவி மடியிலேயே சாய்ந்து உயிரிழந்தார். தொற்றில் இருந்து மீண்டு வாழ்க்கையை தொடங்க நினைத்த சந்திரசேகர் உயிரிழந்ததை கண்டு மனைவி கதறி அழுத காட்சி காண்போரை கலங்க வைத்தது.