Categories
தேனி மாவட்ட செய்திகள்

டிரைவரின் பேச்சை நம்பியதால்… சிறுமிக்கு ஏற்பட்ட கொடுமை… அச்சத்தில் பெற்றோருக்கு தகவல்…!!

தேனி மாவட்டத்தில் ஆசை வார்த்தை கூறி சிறுமியை கோவைக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்த டிரைவரை போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள ஏத்தக்கோவில் பகுதியில் ரத்தினான்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் பால் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் 17 சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கோவைக்கு அழைத்துள்ளார். இதனையடுத்து ரத்தினானின் பேச்சை நம்பி சிறுமியும் அவருடன் சென்றுள்ளார். அங்கு சென்ற பிறகு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து பயந்துபோன சிறுமி உடனடியாக பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையறிந்த அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் கோவைக்கு விரைந்து சென்று ரத்தினானை பிடித்து தேனிக்கு அழைத்து வந்துள்ளனர். மேலும் சிறுமியை மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். இந்நிலையில் ரத்தினான் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

Categories

Tech |