கொரோனாவால் பாதித்த மருத்துவர்களின் தோல் வைரஸின் தீவிரத்தால் கருப்பு நிறமாக மாறியுள்ளது
உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் தொற்று முதலில் சீனாவில் தோன்றியது. அங்கிருக்கும் வூஹான் பகுதியில் அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்திய கொரோனாவை கடுமையான முறையில் எதிர்கொண்டனர். ஒரே வாரத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு சிகிச்சை அளிக்கும் வசதியுடன் மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டு ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் சிகிச்சையில் ஈடுபட்டனர்.அங்கு பணியாற்றிய மருத்துவர்களான ஹூ வெய்பெங் மற்றும் யி பான் ஆகிய இருவரும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததை தொடர்ந்து தொற்றினால் பாதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உள்ளாகியுள்ளனர். பின்னர் தொற்றிலிருந்து குணமடைந்த அவர்களின் கல்லீரலை கொரோனா அதிக அளவு பாதித்ததை தொடர்ந்து இருவரின் தோளும் கருப்பாக மாறியுள்ளது. இதுகுறித்த தகவலை சீன ஊடகங்கள் தற்போது வெளியிட்டு வருகின்றன. அவர்களுடன் நேரடித் தொடர்பு இருந்ததால் நோயின் தீவிரம் காரணமாக இவ்வாறு பின்விளைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.