சாமி தரிசனத்திற்காக சென்ற இடத்தில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் யோக நரசிம்மர் கோவில் இருக்கிறது.இந்த கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்டவர்கள் வேனில் வந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் யோக ஆஞ்சநேயர் எழுந்தருளியிருக்கும் சின்ன மலை அடிவாரத்தில் உள்ள பாண்டவர் இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் தீர்த்த குளியல் செய்துள்ளனர்.
இந்நிலையில்இவர்களுடன் சேர்ந்து ஜெகன்(18) மற்றும் அபிநயா(14) இருவரும் தீர்த்த குளியலுக்காக சென்ற போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு உடற் கூறாய்வுக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதில் மாணவன் ஜெகன் பாலிடெக்னிக் இரண்டாம் வருடமும், அபிநயா தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.