Categories
தேசிய செய்திகள்

கணக்கு சரியாக வராததால் திட்டிய டீச்சர்… ஆத்திரத்தில் தான் அவன் செய்த காரியம்… இரவெல்லாம் புலம்பிய டீச்சர்..!!

ஒன்பதாவது வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் தனது கணக்கு டீச்சரை பழிவாங்குவதற்காக பாலியல் தொழில் செய்வதாக அவரை சித்தரித்து சமூக ஊடங்களில் பகிர்ந்ததால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆக்ராவை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் அதே பள்ளியின் கணக்கு ஆசிரியர் ஒருவரிடம் டியூஷன் படித்து வருகிறார். அந்த மாணவனுக்கு கணக்கு சரியாக வராத காரணத்தினால் அவரது கணக்கு டீச்சர் எப்போதும் அவரை திட்டி வந்துள்ளார். இதனால் டியூஷன் வரவேண்டாம் என்று கூறி அவரை நிறுத்தியுள்ளார். மாணவனின் பெற்றோர் அவனை திட்டி உள்ளனர்.

இதன் காரணமாக கணக்கு டீச்சரை பழிவாங்க முடிவு செய்த அந்த மாணவன் ஒருவரின் துணையோடு ஆசிரியரின் வாட்ஸ்அப் எண்ணில் இருக்கும் புகைப்படத்தை எடுத்து மார்பிங் செய்து முகநூல் பக்கத்தை உருவாக்கி அதில் ஆசிரியரின் மார்பிங் புகைப்படத்தைப் பதிவிட்டு பாலியல் தொழிலாளி என சித்தரித்து மொபைல் எண்ணையும் பதிவிட்டுள்ளார். இதனால் இரவு முழுவதும் ஆசிரியைக்கு ஆபாச அழைப்பு வந்துள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசாரிடம் ஆசிரியை புகார் அளிக்க அந்த சிறுவன் இவ்வாறு செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவனை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |