சட்ட ஒழுங்கில் தமிழகம் முதலிடம் என்று ஆளுநர் உரையில் கூறி இருந்ததற்கு திமுக MLA அன்பழகன் கடும் விமர்சனம் செய்துள்ளார்.
இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அமைச்சர் எஸ்.பி வேலுமணியை ஒருமையில் பேசியதாக திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் கூட்டத்தொடரில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து சட்டப்பேரவை வாயிலில் செய்தியாளர்களை சந்தித்த திமுக MLA ஜெயக்குமார் அமைச்சர் மற்றும் அதிமுக அரசை கடுமையாக சாடினார். அப்போது அவர் கூறுகையில் ,
நான் பேசுவதை அவர்களால் தாங்க முடியவில்லை. குடியுரிமை திருத்த சட்ட மசோதா குறித்து என்னை பேச விடாமல் தடுக்க பார்த்தார்கள். ஒருவர் மாற்றி ஒருவர் பேசாமல் சம்பந்தமே இல்லாத அமைச்சர் பேசுகின்றார். தமிழகம் சட்ட ஒழுங்கில் முதலிடம் பெற்றுள்ளதாக முதல்வர் சொல்கிறார். இதன் எதில் முதலிடம் என்று கேட்டால் முதலமைச்சருக்கு உடனே கோபம் வருகிறது.மத்திய அரசு சொல்லிடுச்சு என்று சொல்கிறார். எந்த மத்திய அரசு , நீங்க அடிமையா இருக்கிற மத்திய அரசு தானே என்று காட்டமாக பேசிய அன்பழகன் தொடர்ந்து அரசை நோக்கி கேள்வி எழுப்பினார்.