மனைவியின் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பார்த்த கணவர் பிள்ளைகளின் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் கைலாஷ். காய்கறி தொழில் செய்து வரும் இவர் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் போதிய வருமானம் இன்றி அவதிப்பட்டு வந்துள்ளார். இதன் காரணாமாகா கைலாஷ் மனைவியும் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு பிரிந்து சென்றுள்ளார். மனைவி பிரிந்த வேதனையில் தனது மூன்று குழந்தைகளுடன் கைலாஷ் துயரத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் ஃபேஸ்புக்கில் தனது மனைவி வேறு ஒரு நபருடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்து மிகுந்த மனவேதனைக்கு ஆளாகி உள்ளார்.
பின்னர் வாழ்க்கையில் விரக்தி அடைந்த இவர், தனது மூன்று குழந்தைகளையும் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் கைலாஷ் தந்தை மகனை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு வந்துள்ளார் வீடு உள்பக்கமாக பூட்டி இருந்தது. மகனை பல முறை கூப்பிட்டும் கதவு திறக்கப்படாத நிலையில், சந்தேகம் கொண்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து விட்டு உள்ளே சென்றுள்ளார்.
அங்கு கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கைலாஷ் மற்றும் மூன்று பிள்ளைகள் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் மூன்று பேரின் சடலங்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப தகராறு காரணமாக பிள்ளைகளை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.