பெங்களூரு மாநிலத்தில் இளைஞன் ஒருவன் குடித்துவிட்டு பெண் ஒருவரிடம் தவறாக நடக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பாண்டேபலயா என்ற பகுதியில் ரீனா என்ற பெண் வசித்து வருகிறார். அவரது கணவன் காஷ்மீரில் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். ரீனாவிற்கு கண் குறைபாடு உள்ளதால் அவரது சகோதரியும் அவருடன் வசித்து வருகிறார். இவர் வசிக்கும் வீட்டு அருகில் 45 வயதான ஜெயப்பிரகாஷ் என்ற நபர் வசித்து வருகிறார். அவர் தினமும் குடிப்பது வழக்கம். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் குடித்துவிட்டு மது போதையில் அருகில் உள்ள ரீனாவின் வீட்டிற்கு சென்றது மட்டுமில்லாமல் அவரது பெட்ரூமில் சென்று ஒளிந்து கொண்டுள்ளார்.
இதையடுத்து ரீனா பெட் ரூமிற்கு வந்த துணி மாற்றிக் கொண்டு இருந்தார். அப்போது அந்த நபர் அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். ரீனாவிற்கு பார்வை குறைபாடு இருந்ததால் அவரால் காணமுடியவில்லை. இதையடுத்து அவர் கத்தி கூச்சலிட்டு உள்ளார். அவரின் சத்தத்தை கேட்ட சகோதரி அங்கு வந்து அவரை காப்பாற்ற முயற்சி செய்தார். இதையடுத்து அந்த நபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். பின்னர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் ரீனாவின் சகோதரி புகார் அளித்தார். புகாரின் பெயரில் அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.