Categories
உலக செய்திகள்

படுக்கை அறை முதல் கழிவறை வரை…” 24 கேரட் கோல்ட்”… எங்க இருக்கு தெரியுமா..?

வியட்நாமில் ஒரு ஹோட்டல் முழுவதும் தங்க முலாம் பூசப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. உலகிலேயே இதுவே முதல் முறையாகும்.

வியட்நாமில் ஹனோய் மாவட்டத்தில் கியாங் வோ ஏரியின் கரையோரத்தில் அமைந்துள்ளது டோல்ஸ் ஹனோய் கோல்டன் லேக் என்பது ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் ஆகும். இதன் சிறப்பம்சம் என்னவென்றால் ஹோட்டல் முழுவதும் தங்க முலாம் பூசப்பட்டு இருக்கும். குளியலறை, படுக்கை அறை, ஏன் கழிவறை கூட தங்க முலாம் பூசப்பட்டு இருக்கும்.

ஊரடங்குக்கு பிறகு திறக்கப்பட்ட இந்த ஹோட்டல் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக சாப்பிடும் உணவில் கூட தங்கத்தை பரிசாக வழங்குகின்றது.  இந்த ஹோட்டலில் காபி குடித்தால் தங்க கப்பில் கொடுப்பார்கள். 24 கேரட் தங்கத்தால் ஆன இந்த ஹோட்டலின் மதிப்பு 200 மில்லியன் டாலர். ஒரு இரவுக்கு 250 டாலர். அதாவது இந்திய மதிப்பில் 18 ஆயிரத்து 364 ரூபாய் ஆகும்.

Categories

Tech |