Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பீரோவை உடைத்து கொள்ளை …. சிறுவன் உட்பட 3 பேர் …. அதிரடியாக கைது செய்த போலீஸ் …!!!

வீடு புகுந்து பணம், நகைகளை திருடிய வழக்கில் சிறுவன் உட்பட  3 பேரை போலீசார் கைது  செய்துள்ளனர் .

திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி மேட்டுக்காலனி பகுதியில் விஜயசாரதி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய குடும்பத்தினர் அனைவரும் சம்பவ தினத்தன்று வீட்டின்  மொட்டை மாடியில்  தூங்கி கொண்டிருந்தன. அப்போது நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த தங்க நகைகள், கொலுசு மற்றும் ரூபாய் 15 ஆயிரத்தை திருடி சென்றுள்ளனர்.

இதனால் விஜயசாரதி கும்மிடிப்பூண்டி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக             15 வயது சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |