அமெரிக்காவில் உபயோகிக்காமல் வைக்கப்பட்ட வாஷிங் மெஷினுக்குள் இருந்த தேனீ கூட்டத்தை ஒரு பெண் கையால் நீக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் என்ற மாகாணத்தில் ஒரு வீட்டில் வாஷிங் மெஷினை உபயோகிக்காமல் வைத்துள்ளனர். எனவே அதனை செடிகொடிகள் உள்ள தோட்டத்தில் வைத்திருக்கிறார்கள். இந்நிலையில் பல நாட்கள் கடந்த பின்பு அந்த வீட்டின் பெண், அந்த வாஷிங் மெஷின் அருகில் சென்றுள்ளார்.
அப்போதுதான் தேனீக்கள் வாஷிங் மெஷினுக்குள் கூட்டமாக வாழ்ந்து வந்தது தெரிய வந்திருக்கிறது. அதிகமாக தேனீக்கள் இருந்ததால் அவை வீடு முழுக்க சுற்றி பறந்திருக்கிறது. அதனை உடனடியாக நீக்க முடிவெடுத்த அவர், தேனீக்களை எளிதாக கையாளக்கூடிய பெண் நிபுணரான எரிக்கா தாம்சனிடம் கேட்டுள்ளார்.
https://www.instagram.com/tv/CQjf5q2nh-N/
எனவே அவர் உடனடியாக வந்து வாஷிங்மெஷினை திறந்துள்ளார். அதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிகமாக தேனீக்கள் இருந்துள்ளது. தேனீக்கள் மீது அதிக விருப்பம் கொண்ட எரிக்கா தாம்சன், சிறிதும் பயமின்றி தண்ணீரை எடுப்பது போன்று தேனீக்களை அள்ளி மற்றொரு பெட்டியில் போட்டிருக்கிறார்.
இதனை அவருடன் வந்த நபர் வீடியோ எடுத்திருக்கிறார். எரிக்கா தாம்சன், தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த வீடியோவை வெளியிட்டு, தேனீக்கள் சேமிப்பில் அதிக ஆர்வம் தனக்கு இருப்பதாக கூறியிருக்கிறார். வாஷிங் மெஷினுக்குள் தேனீக்கள் அதிகம் இருப்பதை பார்த்து மகிழ்ந்ததாகவும், அதனை பாதுகாப்பாக சேமித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தேனீக்கள் சேமிப்பில் அதிக அனுபவம் உள்ளதால், அவற்றுடன் தனக்கு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. எனவே அவை தன்னை கடிக்காது என்று கூறியிருக்கிறார்.