Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சுவையான பீட்ரூட் சட்னி செய்ய தயாரா …..!!

                                                                       பீட்ரூட் சட்னி

தேவையான பொருட்கள் :

பீட்ரூட் -கால் கிலோ

கடலை பருப்பு- 1 டேபிள் ஸ்பூன்

உளுத்தம் பருப்பு- 2 டேபிள் ஸ்பூன்

காய்ந்த மிளகாய்- 3

புளி- 1 நெல்லிகாய் அளவு

தேங்காய்- துருவல்அரை கப்

பூண்டு- 2 பல்

சீரகம்- 1 டீஸ்பு ன்

தனியா -அரை டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை -1 கொத்து

உப்பு- தேவைக்கேற்ப

 

Image result for பீட்ரூட் சட்னி

செய்முறை :

பீட்ரூட்டின் தோலை நன்கு சீவி விட்டு, பொடியாகத் துருவிக் கொள்ளவும்.  கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், வெங்காயம், சீரகம், தனியா, கறிவேப்பிலை எண்ணை விட்டு வறுக்கவும்.பின் பீட்ரூட் சேர்த்து நன்கு வதக்கவும்.

பீட்ரூட் நன்கு வதங்கியதும் அடுப்பை அணைத்து, தேங்காய் சேர்க்கவும்.  பின் புளி, பூண்டு, உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்து கொள்ளவும்.இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இது சாதம், ப்ரெட் உடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

இப்போது சுவையான  பீட்ரூட் சட்னி தயார் 

Categories

Tech |