பீட்ரூட் – பச்சை பட்டாணி புலாவ்
தேவையான பொருட்கள் :
பொருள் – அளவு
பாஸ்மதி அரிசி- 4 கப்
பீட்ரூட்-கால் கிலோ
பெரிய வெங்காயம் -1
பட்டை-2
இலவங்கம்-4
பச்சை மிளகாய்- 3
இஞ்சி பூண்டு விழுது -1 டீஸ்பு ன்
தயிர் -1 டேபிள் ஸ்பு ன்
மிளகாய்த் தூள் -அரை டேபிள் ஸ்பு ன்
தனியாத் தூள்- அரை டேபிள் ஸ்பு ன்
கொத்தமல்லி தழை -1 கைப்பிடி அளவு
நெய் -1 டேபிள் ஸ்பு ன்
பச்சை பட்டாணி- 100 கிராம்
உப்பு -தேவைக்கேற்ப
தாளிக்க
எண்ணெய் – தேவைக்கேற்ப
கடுகு – அரை டீஸ்பூன்
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை – 1 கொத்து
செய்முறை :
பீட்ரூட்டை துருவிக் கொள்ளவும்.வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.பாஸ்மதி அரிசியை கழுவி, 10 நிமிடம் ஊறவைக்கவும்.குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை, இலவங்கம், தாளித்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின் அதில் இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கிய பின்னர் துருவிய பீட்ரூட்டை போட்டு சிறிது வதக்கி, அடுத்து மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து, 2 நிமிடம் வதக்கி தயிர் சேர்த்து, 2 நிமிடம் வதக்கவும்.பிறகு ஊறவைத்த அரிசி, உப்பு, கொத்தமல்லி தழை, நெய், பச்சை பட்டாணி சேர்த்து சமமாக கலந்து குக்கரை மூடி, 1 விசில் விட்டு அடுப்பை அணைக்கவும். தயார் செய்த கலவையுடன், சாதம் உடையாமல் சமமாக கலந்து விடவும்.
இப்பொது சூடான பீட்ரூட் பச்சை பட்டாணி புலாவ் தயார்.