பீட்ரூட் சாலட்
தேவையான பொருள்கள்
பீட்ரூட் ஒன்று
பீன்ஸ் 10
உருளைக்கிழங்கு ஒன்று அல்லது இரண்டு
கேரட் இரண்டு
வெங்காயம் ஒன்று
முட்டை ஒன்று
வினிகர் 3 மேஜைக் கரண்டி
மிளகுத் தூள் ஒரு மேசைக்கரண்டி
உப்பு தேவைக்கேற்ப
செய்முறை
முதலில் பீட்ரூட் கேரட் உருளைக்கிழங்கை தோல் சீவி கொள்ளவும்வெங்காயத்தை பொடியாக நறுக்கி பின்பு பீட்ரூட் கேரட் உருளைக்கிழங்கு பீன்ஸ்முதலியவற்றை குக்கரில் போட்டு 3 அல்லது 5 விசில் வைத்து வேக வைக்கவும் பின்பு முட்டையை தனியே வேக வைத்து தோலுரித்துக் கொள்ளவும் பின்பு காய்களை ஒன்றும் பாதியுமாக மசித்துக் கொள்ளவும் அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வினிகர் ஊற்றி உப்புத்தூள் மிளகுத்தூள் சேர்த்து கடைசியாக முட்டையை நன்றாக கிரி போட்டு ஒரு ஒரு கிளறு கிளறி எடுக்கவும்.
இப்போது பீட்ரூட் சாலட் ரெடி