பீட்ரூட் சூப்
தேவையான பொருட்கள் :
கேரட்- 100 கிராம்
பீட்ரூட் -100 கிராம்
பாசிப்பருப்பு -1 டேபிள் ஸ்பு ன்
தக்காளி சாஸ் -2 டீஸ்பு ன்
மிளகுத் தூள்- 1 டீஸ்பு ன்
உப்பு- தேவைக்கேற்ப
செய்முறை :
முதலில் பீட்ரூட், கேரட் ஆகியவற்றை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.ஒரு கிண்ணத்தில் பீட்ரூட், கேரட் மற்றும் பருப்பை போட்டு தண்ணீர் ஊற்றி குக்கரில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.வேக வைத்தவற்றை மிக்ஸியில் போட்டு ஒன்றும் பாதியுமாக அரைத்து, 3 கப் தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.கலவை கொதித்ததும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
தக்காளி சாஸ், மிளகுத் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.
இப்பொது சுவையான பீட்ரூட் சூப் தயார்.