கொரோனா பொது முடக்கத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பல கட்டங்களாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அடுத்தடுத்து பண்டிகை காலம் வருவதையும் கணக்கில் கொண்டு வருகின்ற நாட்களில் இந்தத் தளர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு பொதுமுடக்கத்தின் போதே டாஸ்மார்க் கடைகளும், மது பார்களும் மூடப்பட்டன. ஆனால் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போது டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் பார்க்க அனுமதி வழங்கப்படவில்லை. இந்த நிலையில் வருகின்ற நாட்களில் டாஸ்மார்க் மதுக் கடை பார்களுக்கு அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக தீபாவளிக்கு முன்பு டாஸ்மாக் பார்களை திறக்க அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. டாஸ்மாக் பார்களை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் திறக்கவும், இறைச்சி உணவகங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழிகாட்டு நெறிமுறைகள் அடுத்த வாரம் வெளியாகும் என கூறப்படுகிறது.