கொரோனா பரவியதை தொடர்ந்து தற்போது பொதுமுடக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாநில அரசாங்கங்கள் கல்வி நிலையங்கள் திறப்பை அறிவித்து வருகின்றன. பல மாநிலங்களில் கல்லூரிகள் செயல்பட ஆரம்பித்துவிட்டது. தமிழகத்திலும் கூட 16ஆம் தேதி பள்ளி – கல்லூரிகள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த முடிவை அரசு மாற்றி அமைத்துள்ளது.
இதனிடையே கல்வி சார்ந்த கல்லூரிகளில் கல்வி சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கல்லூரியில் மாணவர் சேர்க்கை, கலந்தாய்வு என அடுத்தடுத்த பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் தற்போது ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தொழில்நுட்ப படிப்பு மாணவர்கள் நவம்பர் 30ம் தேதிக்கு முன் தங்களின் இடத்தை ரத்து செய்தால் கல்வி கட்டணத்தை முழுமையாக திருப்பி தர ஏஐசிடிஇ உத்தரவிட்டுள்ளது. பிராசசிங் கட்டணமாக ரூ.1000க்கும் மேல் வசூலிக்கக்கூடாது. கல்லூரி இடத்தை ரத்து செய்த 7 நாட்களுக்குள் கட்டணம், சான்றிதழை திருப்பி அளிக்க வேண்டும் என ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற அனைத்துக் கல்லூரிகளுக்கும், பல்கலைக்கழகங்கத்திற்கும் ஆணையிடப்பட்டுள்ளது.