Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

முன்பகை….. செம்ம ஸ்கெட்ச் போட்ட ஏட்டையா…… அதிமுக பிரமுகர் கொலை…… பொதுமக்கள் அதிருப்தி….!!

ஈரோட்டில் ஊராட்சி மன்ற தலைவரை கொலை செய்ய காவல்துறை அதிகாரியே திட்டம் போட்டு கொடுத்த சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடம் அதிருப்த்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியையடுத்த சங்கரன்பாளையத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் அதிமுக பிரமுகரும் அப்பகுதி ஊராட்சி மன்ற தலைவராகவும் இருந்தார். இவர் கடந்த மூன்றாம் தேதி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அதன்படி காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், கூலிப்படையை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 2013 ஆம் ஆண்டு கோவிந்தன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ராதாகிருஷ்ணனுக்கு தொடர்பு இருந்ததாகவும், அதனால் அவரது மகன் அரவிந்தன் ராதாகிருஷ்ணனை கொலை செய்ய பணம் கொடுத்ததால் கொலை செய்தோம் என்று அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அரவிந்தனை காவல்துறையினர் தேடி வந்த வேளையில், அவரே நேரடியாக நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில்,

எனது மாமா பிரபாகரன் தான்  கொலைக்கு திட்டமிட்டு தந்ததாக அவர் தெரிவிக்க, பிரபாகரனை காவல்துறையினர் கைது செய்து விசாரித்தனர். அதில், அவர் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் தலைமைக் ஏட்டாக பணியாற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு, அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கூலி படையினருக்கு காவல் துறையை சார்ந்த ஏட்டையாவே உதவி கொலை செய்ய திட்டம் போட்டுக் கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |