ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய இடத்தை பிடிக்கும் கிராம்பு பல நன்மைகளை நமக்கு தருகின்றது. சளி, இருமலுக்கு உகந்த மருந்தாகவும் பயன்படுகின்றது. இதைப்பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.
ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய இடத்தைப் பிடிப்பது இந்த கிராம்பு. இதில் மருத்துவ குணங்கள் காரணமாக கிராம்பு அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் பண்புகளை கொண்டது. மேலும் இது உணவின் சுவையை அதிகரிக்க பயன்படுகிறது. இரவு படுக்கைக்கு செல்வதற்கு முன்பு உட்கொண்டால் உடல் புத்துணர்ச்சி ஆகவும், வயிறும் நாள் முழுவதும் சுத்தமாக இருக்குமாம்.
கிராம்பு ஒரு நோய் எதிர்ப்பு சக்தியாக பயன்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இது முக்கிய பங்கு வகிக்கின்றது. தற்போது பரவிவரும் தொற்றில் இருந்து நம்மைக் பாதுகாக்கவும் இது பயன்படுகிறது. குறிப்பாக கல்லீரலை பாதிக்கக்கூடிய தொற்றிலிருந்து காக்கின்றது. காலையில் இரண்டு கிராம்புகளை லேசான சுடுநீரில் போட்டு குடித்தால் வயிறு மிகவும் சுத்தமாக இருக்கும்.
அடிக்கடி சளி காய்ச்சல் உள்ளவர்கள் கிராம்பை சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமடையும். கிராம்பு பல ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டிருப்பதால் கிராம்புகளின் பயன்பாடு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. கிராம்பு சாப்பிடுவது நம்மை அலர்ஜி பிரச்சினையில் இருந்து விடுபட செய்யும். இது ஒரு சிறந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளாக செயல்படுகிறது. தொண்டை மற்றும் ஈறுகளில் உள்ள வீக்கத்தை குணப்படுத்த இது உதவுகிறது.