Categories
மாநில செய்திகள்

தேர்தலை முன்னிட்டு…தமிழகம் முழுவதும்… துணை கலெக்டர்கள் “30 பேர்” இடமாற்றம்..!!

தமிழகம் முழுவதும் துணை கலெக்டர்கள் உட்பட 30 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணி புரியும் அரசுத்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றது. தமிழகம் முழுவதும் துணை கலெக்டர் நிலையிலான 30 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் .

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின், சேலம் சிறப்பு பறக்கும் படை அதிகாரி முருகன், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும் (பொது). அங்கிருந்த ரகுகுமார், விழுப்புரம் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலராகவும், தர்மபுரி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலராக இருந்த தணிகாஜலம், தர்மபுரி மாவட்ட கலால் ஆணையராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், சேலம் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலராக இருந்த வேடியப்பன், சங்ககிரி ஆர்.டி.ஓ.,வாகவும், அங்கிருந் த அமிர்தலிங்கம் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலராகவும், சேலம் சமூக பாதுகாப்பு திட்ட முன்னாள் தனித்துணை ஆட்சியராக இருந்த பாஸ்கரன், தமிழ் நாடு மாநில வாணிபக் கழகத்தின் தேனி மாவட்ட மேலாளராகவும் மாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.

Categories

Tech |