Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடி அரசு முடிவதற்குள்…! புதிதாக 1,50,00,000 பேர்…! தமிழர்களை உஷாராக்கிய சீமான் ..!!

நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த நிகழ்வில் பேசிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு வாக்கு நிலையத்திலும், வாக்கு விழாத இடமும் இல்லை நாம் தமிழர் கட்சிக்கு, எல்லா இடதுலையும் ஓட்டு விழுந்திருக்கிறது. சில கிராமங்களில் நாம் தமிழர் கட்சியே இல்லை, நாம் தமிழர் கட்சி கிடையாது.

தஞ்சாவூரில் ஒரு கிராமத்தில் 900 வாக்குகளோ என்னமோ இருக்குது. அதில்  600-க்கும் மேற்பட்ட700க்கும் குறையாத வாக்கு நாம் தமிழர் கட்சிக்கு விழுந்தது. ஆனால் அந்த கிராமத்தில் கட்சியில் ஒருவர் கூட இல்லை. மக்கள் நம்மோடு பயணிக்க தயாராகி விட்டார்கள், நீங்கள் மக்கள் அருகில் செல்ல தயாராகுங்கள் அவ்வளவு தான் நீங்கள் செய்ய வேண்டியது.

2024 தேர்தலில் ஒரு சீட்டோ, அரை சீட்டோ, அது இருக்கிறதோ? இல்லையோ? அதுவும் நினைத்தால் கொடுப்பார்கள், இல்லை என்றால் இல்லை. இதுவும் திராவிட மாடல் என்று அதையும் சொன்னாலும் சொல்வார்கள். இந்த திராவிட மாடல் எல்லாம் நமக்கு தான், இதுவரைக்கும் இல்லாத இந்த மாடல், இதுதான் திராவிட மாடல்.

இதுவரைக்கும் பேசாத அளவிற்கு பெரியார் பெரியார் என்று பேசுகிறார்கள், பெரியாரை நாம பேசவில்லை, நமக்காக அவர்கள் பேசுகிறார்கள். அப்பவும் பாருங்க பெரியாரை பேச வைக்கிறது நம்ம தான், நமக்காக தான் பேசுகிறார். இன்றைக்கு இலவசங்களுக்கு கையேந்துகின்ற நிலைமைக்கு ஆயிரம் ரூபாய்க்கு, இலவச அரிசிக்கு, வேட்டி சேலைக்கு இதற்கெல்லாம் கையேந்துகிற நிலைமைக்கு தள்ளப்படுகிறோம். உழைப்பிலிருந்து வெளியேறிவிட்டால் வந்தவன் இங்கே குடியுரிமை பெற்று இங்கே இருந்து விட்டார்கள் என்றால், அவர்கள் ஒன்றரை கோடி பேர் மோடி ஆட்சி இறங்குவதற்குள் தமிழகம் வந்து விடுவார்கள் என தெரிவித்தார்.

Categories

Tech |