Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

காலில் விழட்டுமா…! ”வீட்டு பத்திரம் தரேன்’ ஒரு குவார்ட்டர் மட்டும் தாங்க … கெஞ்சிய குடிமகன் …!

வீட்டு பத்திரத்தை வேண்டுமானாலும் தருகிறேன் எனக்கு மதுபானம் கொடுங்கள் என கேட்டது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கொரோனா   தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து 40 நாட்கள் மூடியிருந்த மதுபானக்கடைகள் 7ஆம் தேதி திறக்கப்பட்டு முதல் நாளிலேயே மாநிலம் முழுவதிலும் 170 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டது. மது கடைகள் திறக்கப்பட்டதும் மது பிரியர்கள் தங்களுக்கு பிடித்தமான மதுபானங்களை கூட்ட நெரிசலையும் பொருட்படுத்தாமல் வாங்கி சென்றனர். மது கடைகள் திறக்கப்பட்டதை கொண்டாடும் விதமாக குடிமகன்கள் வெடி வெடித்து கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் ஈரோட்டை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவரது செயல் மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. குடியினால் சுயநினைவை இழந்து தவிப்பவர்களை பார்த்துள்ளோம். ஆனால் குடிக்க  இப்படியும் செய்வார்களா என்ற எண்ணத்தை மக்கள் மனதில்  இவர் எழுப்பியுள்ளார். ஈரோட்டில் இருக்கும் டாஸ்மாக் கடை முன்பு மது வாங்க சென்ற இவர் “என்னிடம் அனைத்து ஆதாரங்களும் உள்ளது. வீட்டின் பத்திரத்தையும் தருகிறேன். எனக்கு மதுபானத்தை தாங்க கொரோனாவால் இரண்டு மாதங்கள் மது அருந்தாமல் கை கால்கள் நடுங்க ஆரம்பித்துவிட்டது, தூக்கம் வரவில்லை.

ஆயிரம் ரூபாய் சம்பளத்தை விட்டுவிட்டு டாஸ்மாக் திறப்பதை அறிந்ததும் வந்துவிட்டேன். வீட்டின் பத்திரத்தை தரவேண்டுமா தருகின்றேன். யார் காலில் வேண்டுமானாலும் விழுகின்றேன் தயவுசெய்து குவாட்டர் மட்டும் தாங்க எங்களால் அரசாங்கம் நஷ்டம் அடையக் கூடாது” என அவர் கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் உயர் நீதிமன்றம் உத்தரவை அடுத்து இன்று மதுபான கடைகள் மூடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |