Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அண்ணா மேலாண்மை நிலையத்தில்… குறுகிய கால பயிற்சி வகுப்புகள் தொடக்கம்… விழாவை சிறப்பித்த அதிகாரிகள்…!!

அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2021-22-ம் வருடத்திற்கான குறுகிய கால பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றுள்ளது .

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2021-22 ஆம் ஆண்டில் குறுகிய கால பயிற்சி வகுப்புகளின் தொடக்க விழா நடை பெற்றுள்ளது. இந்த விழாவுக்கு அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலைய துணை பதிவாளரும் முதல்வருமான உமாபதி வரவேற்றுள்ளார்.

இதனை அடுத்து இந்த விழாவிற்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளரும் வேளாண்மை இயக்குனருமான லோகநாதன் முன்னிலை வகித்துள்ளார். இதனை தொடர்ந்து இந்த விழாவிற்கு துணைப்பதிவாளர் பொது விநியோகத் திட்டம் கி.மணி, பெரிய காஞ்சிபுரம் கூட்டுறவு நகர வங்கி துணை பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குனர் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் முடிவில் விரிவுரையாளர் கோகிலா நன்றி கூறியுள்ளார்.

Categories

Tech |