மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், மைசூர் மாவட்டம், ஹொன்னம்மனகட்டே கிராமத்தை சேர்ந்த நயீம் பாஷா. இவருடைய மனைவி சல்மா. நயீம் பாஷாவுக்கு தன் மனைவி சல்மாவின் நடத்தையின் மீது சந்தேகம் இருந்தது. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் சம்பவ தினத்தன்று சல்மான் வீட்டில் வேலை பார்த்து வந்த போது சுவற்றில் தலையை மோதி மோதி கொலை செய்துள்ளார்.
பின்னர் காவல் நிலையம் சென்று தன் மனைவியின் மீது சுவர் இடிந்து விழுந்து விட்டது என்று புகார் அளித்துள்ளார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்து சல்மாவின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சல்மா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கொலை வழக்கு பதிவு செய்து நயீம் பாஷாவை போலீசார் கைது செய்தன.ர் இது பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியபோது கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.