Categories
விளையாட்டு

பெய்ஜிங் குளிர்கால பாரா ஒலிம்பிக்: ரஷ்யா,பெலாரஸ் வீரர்களுக்கு தடை ….!!!

2022 பெய்ஜிங் பாரா ஒலிம்பிக் குளிர்கால விளையாட்டு போட்டிகளில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர் நடுநிலையாக பங்கேற்பதாகவும், அவர்கள் பாரா ஒலிம்பிக் கொடியின் கீழ் போட்டியிடுவார்கள் என்றும், பதக்க அட்டவணையில் அவர்கள் சேர்க்கப்பட மாட்டார்கள் என சர்வதேச பாரா ஒலிம்பிக் கமிட்டி அறிவித்து இருந்தது.இதுகுறித்து உக்ரேனிய விளையாட்டு வீரர்கள் வெளிட்ட கூட்டு அறிக்கையில் ,’ பாரா ஒலிம்பிக்கின் இந்த முடிவு கடுமையான விமர்சனத்திற்கும் உள்ளானது.
மேலும்  உக்ரைனில் இன்று நடந்து வரும் போரை மேற்கோள் காட்டி பெய்ஜிங் குளிர்கால பாரா ஒலிம்பிக்கில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் விளையாட்டு வீரர்கள் தடை செய்யப்பட்டுள்ளனர் என சர்வதேச பாரா ஒலிம்பிக் குழு அறிவித்துள்ளது.இந்த விளையாட்டுகளின் ஒருமைப்பாட்டைக் காக்க இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதில்  கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |