Categories
உலக செய்திகள்

அதிபராகும் முயற்சியின் முன்னேற்பாடா….? திருத்தப்பட்ட சட்ட வரம்பு…. தகவல் வெளியிட்ட செய்தி நிறுவனம்….!!

கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடத்தப்படும் மாநாடு தொடர்பாக பிரபல செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநாடு ஒன்று நடத்தப்படுகிறது. இது குறித்து பிரபல செய்தி நிறுவனம் கூறியதில் “சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடானது கடந்த புதன்கிழமை அன்று தொடங்கப்பட்டது. இந்த மாநாட்டில் கடந்த 100 ஆண்டுகளாக கட்சியில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகளை பட்டியலிட்டு தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் கட்சியின் 25வது தேசிய மாநாட்டை நடத்துவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக சீன அதிபரின் பதவிக்காலத்தை நீட்டிப்பது தொடர்பாகவும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று கூறப்படுகிறது. அதிலும் ஜின்பிங் கம்யூனிஸ்ட் கட்சி, மத்திய ராணுவம், முப்படைகளின் தலைமைப் பொறுப்பு போன்ற உயர் பதவிகளை வகிக்கும் அதிபராக இருக்கிறார். இந்த நிலையில் அவரது பதவிக்காலம் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டால் மூன்றாவது முறையாக பதவி ஏற்கும் முதல் அதிபர் என்ற பெருமையை அவர் பெறுவார்.

இதற்கு முன்னதாக இருந்த அனைத்து அதிபர்களும் இரண்டு முறை ஆட்சி செலுத்திய பின்னரோ அல்லது தங்களுக்கு 68 வயது நிறைவடைந்து விட்டாலோ பதவியிலிருந்து விலகி விடுவார்கள். ஆனால் கடந்த 2018 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பு திருத்தத்தின் படி ஒருவர் இருமுறை மட்டும் அதிபராகலாம் என்ற சட்ட வரம்பு நீக்கப்பட்டது. குறிப்பாக இந்த திருத்தமானது ஜின்பிங் பதவிக்காலத்தை நீட்டிப்பதற்கான முன்னேற்பாடாக கூட இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |