திருநெல்வேலி மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த தச்சு தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி பகுதியில் அழகிய நம்பி(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அந்த பகுதியில் தச்சு தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது மகனான நாகராஜன் சென்னையில் தங்கி தச்சு தொழில் செய்து வந்துள்ளார். இதனையடுத்து அழகியநம்பியின் மனைவி 8 வருடங்கள் முன்பு இறந்து விட்ட காரணத்தினால் வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து வீட்டில் இவர் மட்டும் இருந்ததால் மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
இதனால் மனமுடைந்த அழகிய நம்பி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருக்குறுங்குடி போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மேலும் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.