திருவள்ளூர் அருகே அதிமுக ஒன்றிய கவுன்சிலர் வீட்டில் அவர் வீட்டில் வேலை பார்த்த வேலைக்காரனே கைவரிசை காட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி இந்தியன் வங்கி தெருவில் வசித்து வருபவர் விஜய். இவர் அதிமுக கட்சியின் முக்கிய நிர்வாகியும், அப்பகுதி ஒன்றிய கவுன்சிலரும் ஆவார். மேலும் இவர் கட்டிட கான்ட்ராக்டராகவும் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்றைய தினம் இவரது சித்தப்பா உடல்நலக்குறைவால் மரணிக்க, அவர்களது வீட்டுக்கு குடும்பத்துடன் சென்று விட்டார் விஜய்.
பின் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது 59 பவுன் நகை 2 லட்சத்து 70 ஆயிரம் ரொக்கப்பணம் 20 கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவை திருடு போய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்க விசாரணை மேற்கொண்ட அவர்கள், அவரது வீட்டில் வேலை பார்த்து வந்த கட்டிட மேஸ்திரியான முருகன் என்பவர் தான் கைவரிசையை காட்டியது என்பது தெரியவர,
அவரை கைது செய்து அதிகாரிகள் விசாரணை மேற்கொள்கையில், திருடியதை ஒப்புக்கொண்டார். பின் அவரிடமிருந்து 40 பவுன் தங்க நகை, அரை கிலோ வெள்ளி பொருள் 20 ஆயிரத்து 32 ரூபாய் ரொக்கப் பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்தனர். திருவள்ளூரை சுற்றியுள்ள காவல் நிலையங்களில் முருகன் மீது 10க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் ஏற்கனவே இருப்பது குறிப்பிடத்தக்கது.