Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள… குடும்ப அட்டை வேண்டும்… கோரிக்கை விடுத்த மீனவ பெண்கள்…!!

ராமநாதபுரத்தில் உள்ள மீனவர்கள் அனைவருக்கும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டையை வழங்க வேண்டும் என மீனவ பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்கச்சிமடம் பகுதியில் உள்ள சி.ஐ.டி.யூ மீனவர் மகளிர் கடல் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி, பொருளாளர் சுடலைகாசி மற்றும் மீனவ பெண்கள் மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 130 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்நிலையில் மீனவர்களுக்கு இலங்கை கடற்படை தாக்குதல், இயற்கை பேரிடர் போன்ற பல்வேறு காரணங்களால் வருடத்திற்கு 100 நாட்கள் கூட கடலுக்கு செல்ல முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து அவதிப்படுகின்றனர்.

இதனையடுத்து மாவட்டம் முழுவதிலும் உள்ள 90% மீனவ குடும்பங்களுக்கு ரேஷன் கார்டு சரியான முறையில் வழங்கப்படவில்லை எனவும், சிலருக்கு வறுமை கோட்டிற்கு மேல், சிலருக்கு வறுமைக்கோட்டிற்கு கீழ் எனவும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரே தொழில் செய்து வருபவர்களுக்கு பாரபட்சமாக வழங்குவது முறையற்றது என அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் இதனை சரியான முறையில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், மீனவர்கள் அனைவருக்கும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களாக மாற்றி குடும்ப அட்டை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |