ரஷ்ய நாட்டிற்கு உளவு பார்த்து வந்த பெலூகா (beluga) வகை திமிங்கலத்தை மீனவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
நார்வே நாட்டில் உள்ள ஆழ்கடல் பகுதியில் சில மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது பெலூகா வகை திமிங்கலம் (beluga whale) ஒன்று அந்த இடத்தில் சுற்றித் திரிந்ததை மீனவர்கள் கண்டனர். அந்தத் திமிங்கலம் மீனவர்கள் அருகில் வந்த போது அதன் மேல் ஒரு சிறிய கேமரா பொருத்தப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.இதையடுத்து மீனவர்கள் அந்தக் கேமராவை எடுத்துப் பார்த்தனர்.
அப்போது இந்த வகை கேமரா ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டதும், உளவு வேலைகளுக்காக இந்த திமிங்கலம் பயன்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இது பற்றி விசாரணை நடத்தியதில் முன்னாள் ராணுவ அதிகாரியான விக்டர் பாரனெட்ஸ் (Viktor Baranets) என்பவர் திமிங்கலத்தை உளவு பார்க்க அனுப்பியிருப்பதாக தகவல் வெளியில் வந்தது. இவர் நேட்டோ நாடுகளின் ஒப்பந்தத்தையும் மீறி செயல்பட்டதால் ரஷ்யா அவரை பணிநீக்கம் செய்துள்ளது.