பெருங்காயத்தை சுடுதண்ணீரில் கலந்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்த தொகுப்பு.
பெருங்காயம் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவும் எனவே பெருங்காயத்தை சுடுதண்ணீரில் கலந்து குடிப்பதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைப்பதோடு சர்க்கரை நோய் இல்லாதவர்களுக்கு நோய் வருவதையும் தடுக்கும்.
பெருங்காயத்தில் இருக்கும் பீட்டா கரோட்டின் நமது கண்களை பராமரிக்க உதவி புரிவதோடு ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது பெருங்காயத் தூளை தண்ணீரில் கலந்து குடிப்பதனால் கண் வறட்சி நீங்கி பிரகாசமாக தெரியும்.
தண்ணீரில் பெருங்காயம் கலந்து குடிப்பதால் அஜீரண பிரச்சனைகளை தீர்ப்பது மட்டுமல்லாமல் அசிடிட்டி பிரச்சனைக்கு தீர்வளிக்கும்.
பெருங்காயத் தூளை தண்ணீரில் கலந்து குடிப்பதனால் எலும்புகள் வலிமை பெறும்.
பெருங்காயத்தில் இருக்கும் ஆன்டி-பாக்டீரியல் தன்மை ஆஸ்துமா பிரச்சனைக்கு தீர்வளிக்கும்.