கோடைகாலத்தில் அதிகப்படியான வெப்பத்தை குறைக்க இளநீர் அருந்துவது நல்லது. அந்த வகையில் இளநீரில் இருக்கும் மருத்துவ குணங்கள் பற்றிய தொகுப்பு.
- கொழுப்பு என்பது இளநீரில் அறவே இல்லாத காரணத்தினால் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
- சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதால் நீரிழிவு நோய் இருப்பவர்கள் இளநீர் அருந்துவது அவசியம்.
- கிருமிகள் மூலம் காய்ச்சல் ஏற்பட்டு வரும் நிலையில் ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட இளநீர் அருந்துவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து கிருமிகளின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கின்றது.
- பொட்டாசியம் நிறைந்த இளநீர் ரத்த அழுத்தத்தை குறைக்கவும் வாதம் தொடர்பான நோய்களுக்கு நல்ல மருந்தாகவும் உள்ளது.
- இளநீரில் பொட்டாசியம் மெக்னீசியம் அதிக அளவில் இருப்பதால் சிறுநீரகக் கற்கள் உருவாவதை அறவே தடுக்கின்றது.
- உடலிலிருக்கும் கொலஸ்ட்ராலை குறைப்பதில் மற்ற பானங்களை காட்டிலும் இளநீர் சிறந்த முறையில் உதவுகிறது.
- இளநீரைக் குடித்து வருவதனால் அதில் இருக்கும் கால்சியம் மற்றும் மெக்னீசியம் சருமத்தின் பொலிவுக்கு காரணமாகின்றது.